பார்த்ததில் ரசித்த நவீன முருகன் ஓவியம் - கந்த கடவுளை பற்றி சில வரிகள்

பார்த்ததில் ரசித்த நவீன முருகன் ஓவியம் - கந்த கடவுளை பற்றி சில வரிகள் 

















    இந்து சமயத்திற்கு இருக்கும் ஒரே பெறுமை எவ்வளவு நவீனம் கலந்தாலும்  அதன் அழகும் இறை தன்மையும் மாறுவதில்லை. எந்தவித மத கட்டுப்பாடுகள் அற்ற சுகந்திர சமயமாக இந்து சமயம் விளங்குகிறது.
அடுத்து எம் அப்பன் தமிழ் கடவுள்  முருகனை பற்றி கூறப்போனால், அழகு என்றால் முருகன், முருகன் என்றால் அழகு. அவன் தந்தைக்கே ஞான உபதேசம் செய்த ஞானத்தின் மறுஉருவம், வெற்றியின் தெய்வம். அவன் குன்றுதோறும் ஆடும் குமரன். குறிஞ்சி நிலத்துக்குரியவன் என்பதால் குறிஞ்சி குமரன் என்றும் அழைப்பர். 
சிவனின் மூன்றாவது கண்ணான நெற்றி கண்ணில் இருந்து உதித்ததால் முருகன் என்றும் , கார்த்திகை பெண்களால் வளர்க்கப்பட்டதால் கார்த்திகேயன் என்றும், கந்தன், கடம்பன், சுப்பிரமணியன், ஆறுமுகன் என்று பல பெயர்கள் கொண்டு அழைக்கப்படுவார்.
ஆறு முகமும் பன்னிரு கைகளையும் கொண்ட ஆறுமுகன் மும்மலங்களான  ஆணவம் ,கன்மம் ,மாயையின் உருவமான சூரன், சிங்கமுகாசுரன், கஜமுகாசுரனை தன் சக்தி வேல் கொண்டு சம்ஹரம் செய்தவர்.
முருகன் தன் தேவிமார்களுடன் எழுந்தருளும் காட்சி இச்சா சக்தி, ஞானா சக்தி, கிரியா சக்தியின் தத்துவத்தை உணர்த்துகிறது.

Comments