சாக்கிய நாயனார் (Sakiya Nayanar)
சாக்கிய நாயனார் (Sakiya Nayanar) அன்பே சிவம், சிவமே அன்பு என்பதற்கு பொருத்தமான எடுத்துக்காட்டு இந்த சாக்கிய நாயனார் கதை. இறைவனுக்கு உள்ளன்போடு எதை சமர்பித்தாலும், இறைவன் அதை அன்போடு ஏற்றுக்கொள்வர் என்பதை சாக்கிய நாயனார் வரலாறு புலப்படுத்துகிறது. சாக்கியர் காஞ்சிபுரம் அருகில் உள்ள திருச்சங்கமங்கை என்ற ஊரில் வாழ்ந்தவர். இவர் பௌத்த மதத்தை தழுவியவர். சாக்கியம் என்றால் பௌத்தம் என்றும் பொருள் உண்டு , இதனால் தான் சேக்கிழார் பெருமான் இவரை சாக்கிய நாயனார் என்று பெரிய புராணத்தில் குறிப்பிட்டுள்ளார். இவர் இளமைக் காலத்திலேயே இனி ஒரு பிறப்பு வேண்டாம் என்ற எண்ணம் கொண்டவராகவும், ஞானத்தை பற்றிய தேடலில் அதிக ஆர்வம் கொண்டவராகவும் இருந்தார். அதற்கு என்ன செய்ய வேண்டும் என தேடத் தொடங்கி பல சமய நூல்களையும் கற்க தொடங்கினர். அதன் ஒரு கட்டமாக சைவ சமய நூல்களை படித்தார். அதில் ஒரு தெளிவைக்கண்டார். பிறவிப்பெருங்கடலைக் கடக்க சிவனே வழி என்று உணர்ந்தார். சாக்கிய கோலத்தில் இருந்ததாலும், அங்கு சாக்கியர்கள் அதிகம் வசித்த காரணத்தினாலும், ஈஸ்வர வழிபாட்டை யாரும் அறியா வண்ணம் மறைமுகமாக செய்து வந்தா...