புகழ்பெற்ற ஓவியர் ரோபர்ட் டங்கெனின் ஓவியங்கள் (Robert Duncan's Paintings)
புகழ்பெற்ற ஓவியர் ரோபர்ட் டங்கெனின் ஓவியங்கள்
(Robert Duncan's Paintings)
ரோபர்ட் டங்கென் என்பவர் ஒரு அமெரிக்க ஓவியர் ஆவர். இவர் 1952ஆம் ஆண்டு சால்ட் லேக் சிட்டியில் பிறந்து, பத்து பிழைகளை கொண்ட பெரும் குடும்பத்தில் வளர்ந்தவர்.இவர் தனது சிறு பராயத்திலேயே கால்நடை வளர்ப்பு, மற்றும் கிராமிய வாழ்க்கை முறையில் நாட்டம் கொண்டவர். இவர் தனது ஐந்து வயதிலிருந்தே ஓவியத்தில் நாட்டம் கொண்டவர், இவரது ஆர்வத்தை கண்டு இவரது பாட்டி இவரது பதினோராவது வயதில் வர்ணம் தீட்டும் தொகுப்பொன்றை பரிசளித்து, ஓவியக்கலை வகுப்பிலும் சேர்த்தார்.
இவர் உட்டா பல்கலைக்கழகத்தில் ஓவியக்கலை பயின்றார். ரோபர்ட் அருங்காட்சியகங்களை பார்வையிடவும், அவர் போற்றும் கலைஞர்களை பற்றி படிப்பதட்காகவும் தனது பயணத்தை விரிவு படுத்தினர். இவர் அமெரிக்காவின் கௌ போய் கலைஞராக 29ஆவது வயதில் தெரிவுசெய்யப்பட்டார் மற்றும் பீனிக்ஸ் கலை அருங்காட்சியகத்தின் வருடாந்த கண்காட்சியில் இரண்டு வெள்ளி பதக்கங்களையும் வென்றார்.
இவர் வாழ்க்கை விவசாயம், கிராமியம், மலைகள், இயற்கை , பெரும் குடும்பம் முறையை ஒட்டியதால், இவரின் படைப்பும் அவை சார்ந்த பிரதிபலிப்பை கொண்டதாக காணப்படுகிறது. இவரது ஓவியங்கள் எண்ணெய் வர்ண ஓவியங்கள் என்பதால் தத்ரூப தன்மை நிறைந்த ஓவியங்களாக காணப்படுகிறது.








































Comments
Post a Comment