Posts

Showing posts from May, 2021

அக்பரும் பீர்பலும்: முட்டாள் திருடன்

Image
அக்பரும் பீர்பலும்: முட்டாள் திருடன்   ஒரு சமயம், மன்னர் அக்பரின் இராஜ்ஜியத்தில் இருந்த வணிகர் ஒருவரின் பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டது. பொருட்களை பறி கொடுத்த அந்தவணிகர் நீதிமன்றத்தின் உதவியை நாட மன்னர் அக்பரிடம் சென்றார். மன்னர் திருடனை கண்டுபிடிக்கும் பொறுப்பை பீர்பாலிடம் ஒப்படைத்தார் . அந்த வணிகர் தன்னிடம் பணி புரியும் பணியாளன் ஒருவன் தான் இதை செய்திருக்க வேண்டும் என சந்தேகித்தார், அதனை பீர்பாலிடமும் கூறினார். அந்த வணிகரிடம் பணி புரியும் பணியாட்களை வரிசையாக நிற்க சொன்னார் பீர்பால்.  அவர்களிடம் திருட்டு போன சம்பவத்தை பற்றி விசாரித்த போது பணியாட்கள் எல்லோரும் தாம் அதை செய்யவில்லை என மறுத்தனர். பின்னர் பீர்பால் பணியாட்கள் ஒவ்வொருவருக்கும் ஒரே அளவான குச்சியை வழங்கி "இந்த திருடனை கண்டுபிடிக்கும் அதிசய குச்சி, யார் கொள்ளையடித்தாரோ  அவரின் குச்சி நாளைக்குள் இரண்டு அங்குலங்கள் அதிகரிக்கும்." என கூறினார். மறுநாள் பீர்பால் பணியாட்கள் அனைவரின் குச்சிகளையும்  பரிசோதித்து பார்த்த போது ஒருவனுடைய குச்சி மட்டும் இரண்டு அங்குலங்கள் குறைவாக இருந்தது. "அந்த உயரம் ...

அக்பரும் பீர்பலும்: பீர்பாலின் கிச்சடி

Image
அக்பரும் பீர்பலும்:   பீர்பாலின் கிச்சடி  ஒரு குளிர்கால வேளையில் மன்னர் அக்பரும் பீர்பலும் ஏரிக்கரையோரம் நடந்து சென்றுக்கொண்டிருந்தனர். அப்போது அக்பர் அந்த குளிர்ந்த ஏரி நீரில் தனது விரல்களை வைத்துவிட்டு குளிர் தாங்காது சற்றென கையை வெளியே எடுத்து, "எவராலும் இந்த குளிர்ந்த நீரினுள் இருந்து ஒரு இரவைக்கூட கழிக்க முடியாது என எண்ணுகிறேன்." என்று கூறினார். பீர்பால் அதனை ஒரு சவாலாக எடுத்துக்கொண்டு, "அதை செய்யக்கூடிய ஒருவரை கண்டுபிடிப்பேன்" என கூறினார். அவ்வாறு ஏரியின் குளிர்ந்த நீரினுள் ஒரு  இரவை கழிக்கக்கூடியவர்களுக்கு 1000 பொற்காசுகள் வழங்குவதாக மன்னர் உறுதியளித்தார். விரைவிலேயே, பீர்பலும் 1000 பொற்காசுகள் சவாலை மேற்றக்கொள்ள ஒப்பு கொண்ட ஒரு ஏழையை கண்டுபிடித்தார். இரண்டு அரச காவலர்கள் காவல் நிற்க அந்த ஏழை இரவு முழுவதையும் அந்த உறைபனி நீரினுள் நின்றார். மறுநாள் காலையில் வெகுமதியை பெற்று கொடுப்பதற்காக அந்த ஏழையை அரசவைக்கு அழைத்துச்சென்றனர்.  மன்னர் அந்த ஏழையிடம் "எவ்வாறு தாங்கள் அந்த உறைபனி நீரினுள் ஒரு இரவை கழித்தீர்கள்?" என கேட்டார். அதற்கு அந்த ஏழை "அரசே த...

அக்பரும் பீர்பலும் : இராஜ்ஜியத்தில் உள்ள காகங்கள் எத்தனை?

Image
அக்பரும் பீர்பலும் : இராஜ்ஜியத்தில் உள்ள காகங்கள் எத்தனை?   ஒரு சமயம் மாலை வேளையில்  அக்பரும் பீர்பலும் நந்தவனத்தில் இளைப்பாற நடந்து சென்றுகொண்டிருக்கும் பொழுது, மன்னர் அக்பருக்கு பீர்பாலின் அறிவுக்கூர்மையை சோதித்துப்பார்க்க ஒரு தந்திரமான கேள்வியை கேட்க  எண்ணம் தோன்றியது. சக்கரவர்த்தி பீர்பாலை நோக்கி "நமது இராஜ்ஜியத்தில் மொத்தம் எத்தனை காகங்கள் உள்ளன?" என்று கேட்டார். மன்னர் தன்னை கேளிக்கையாக சோதிக்கிறார் என்று உணர்ந்த பீர்பால், எவ்வித தாமதமும் இன்றி அடுத்த கனமே "அரசே நமது இராஜ்ஜியத்தில் எண்பதாயிரத்து தொள்ளாயிரத்து எழுபத்தி ஒரு காகங்கள் உள்ளன." என்று பதிலளித்தார். பீர்பாலின் பதிலை கேட்டு வியந்து போன சக்கரவத்தி அக்பர், மேலும் பீர்பாலை சோதித்து பார்க்க எண்ணி, "நம்மிடம் அதைவிட அதிக எண்ணிக்கையான காகங்கள் இருந்தால்?" என வினவினார். அதற்கு பீர்பால், "ஆ! மற்ற இராஜ்ஜியத்தில் இருந்து எமது இராஜ்ஜியத்திற்கு காகங்கள் வருகை தந்திருக்கும்." என பதிலளித்தார். "அப்படியானால், நம்மிடம் அதைவிட குறைந்த எண்ணிக்கையான காகங்கள் இருந்தால்?" என கேட்டார் மன்னர் அக்...